தமிழ்மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் தியாகத் தாய். அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவுநாளும் மகளிர் தினப் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) மாலை-03.30 மணியளவில் யாழ் கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
அன்னை பூபதியின் பேத்தி குணேஸ்வரி கலந்து கொண்டு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தனது மோசமான குடும்பச் சூழ்நிலைக்கு மத்தியிலும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் 3 ஏ பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி தேவதாஸ் கிஷானி தியாகத் தாய். அன்னை பூபதி ஞாபகார்த்த விருது வழங்கித் தமிழ்மக்கள் கூட்டணியினரால் மதிப்பளிக்கப்பட்டார்.






