கொழும்பு துறைமுகத்தில் சடலம் கண்டுபிடிப்பு

கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவினரால் சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் கப்பற்துறைக்கு அருகிலுள்ள கடலில், நேற்று (23) மதியம் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சுமார் 5 அடி உயரமுள்ள ஒருவர் எனவும், அவரது தலைமுடி சிறிது வளர்ந்துள்ளதாகவும், உடல் மோசமான நிலையில் உள்ளதாகவும், நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

பரிசோதனைகளுக்குப் பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.