பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே…
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே
பாசத்தில் எங்களின் தாயானான்..
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
நிலை தேடியே வந்திடும் தலையானான்
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே.
இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல
இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான்
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ்ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீசென்றான்
புலிவாழ்ந்திடும் வரையினில் தூசென்றான்..
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ்
வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலொரு புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான்
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே! மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
என்றுமே எங்களின் தளபதியே நீ
எங்களின் வானத்து வளர்மதியே
இன்றுனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்கும் உன் போதனைகள்
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே.






