பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்

யாழ் பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில்  திங்கட்கிழமை (08.12.2025) நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் குள நீரினுள் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளார்.

குறித்த குளத்தில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற நிலையில் பண்டத்தரிப்பு பிரான்பற்றுப் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் குளத்தினுள் காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போதும் காணாமல் போன இளைஞர் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.