மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் விடியல் நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (23.10 2025) மாலை-03.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போா் கூடத்தில் மாற்றம் அறக்கட்டளை இயக்குனர் எஸ்.பெனிக்சன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும், வளர்பிறை நிறுவன இயக்குனர் அருட்பணி.சூசை டெமியன் அமதி அடிகளாா் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.





