உக்ரைனுக்கு ரகசியமாக அனுப்பப்படும் பிரான்ஸ் படைவீரர்கள்? ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரெஞ்சுப் படைவீரர்களை ரகசியமாக உக்ரைனுக்கு அனுப்பத் திட்டமிட்டுவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

விடயம் என்னவென்றால், சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது பிரான்ஸ்.

உக்ரைனுக்கு ரகசியமாக அனுப்பப்படும் பிரான்ஸ் படைவீரர்கள்? ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு | Russia Accuse France Sent Troops To Ukraine

அந்த ஒப்பந்தத்தின்படி, உக்ரைனுக்கு 100 ரஃபேல் போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்க உள்ளது பிரான்ஸ்.

ஆக, அந்த ஆயுதங்களை உபயோகப்படுத்த உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரெஞ்சுப் படைகளை உக்ரைனுக்கு அனுப்ப ரகசியமாக மேக்ரான் அரசு திட்டமிட்டுவருவதாக ரஷ்யா நம்புகிறது.

 

அப்படி பிரான்ஸ் தனது படைவீரர்களை உக்ரைனுக்கு அனுப்பும்பட்சத்தில், பிரான்ஸ் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் ஈடுபடுவதாக ரஷ்யா கருதும் என ரஷ்ய தரப்பு எச்சரித்துள்ளது.அத்துடன், பிரான்ஸ் தரப்பு வீரர்கள் யாராவது உக்ரைனில் காணப்படுவார்களானால், அவர்களே ரஷ்யப் படைகளின் முதன்மை இலக்காக தாக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்