உலகின் மிகச்சிறிய எருமை

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மலாவாடியைச் சேர்ந்த மூன்று வயது நீர் எருமை, உலகின் மிகச் சிறிய நீர் எருமை என்ற கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

இந்த நீர் எருமை திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்தது.

ராதா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நீர் எருமை 2 அடி 8 அங்குலம் (83.8 செ.மீ) உயரம் கொண்டது.

உலகின் மிகவும் குட்டையான பெண்ணாக அறியப்படும் 2 அடி 0.7 அங்குலம் உயரமுடைய ஜோதி அம்கேவை (இந்தியா) விட சில மடங்கு ராதா உயரமானது.

ராதா உலகின் மிக உயரமான உயிருள்ள நீர் எருமையான கிங் காங்கை (தாய்லாந்து) விட கிட்டத்தட்ட நான்கு அடி (1.2 மீ) உயரம் குறைவானது. கிங் காங்கின் உயரம் 6 அடி 0.8 அங்குலம் (185 செ.மீ) ஆகும்.