ஹோர்முஸ் நீரிணை அருகில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் வணிகக் கப்பலொன்று நேற்று திங்கட்கிழமை (8) பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஓமனின் துக்ம் துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த MT Marivex என்ற எண்ணெய்க் கப்பலே தீ விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தின் பின்னணியில் அமெரிக்க கடற்படை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ பரவலின்போது கப்பலில் எண்ணெய் இல்லாததால் விபத்து பாரதூரமாக நேரவில்லை என்றும் கூறப்படுகிறது.
கப்பலில் தீ பரவியதையடுத்து, அதிலிருந்த 24 இந்திய மாலுமிகளையும் இந்திய கடற்படை ஹெலிகொப்டர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.



