அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத் துறைத் தலைவர் மஜித் காதேமி கொல்லப்பட்டார்.
இது குறித்து ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட பதிவில், “அதிகாலையில் அமெரிக்க - சியோனிச எதிரிகள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில், ஐஆர்ஜிசி உளவு அமைப்பின் வலிமையான மற்றும் கல்வி அறிவு மிக்க தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி வீரமரணமடைந்தார்” என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் ஐஆர்ஜிசி உளவு அமைப்பின் தலைவர் ஜெனரல் முகமது காசெமி கொல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக காதேமி அந்தப் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் படையின் உளவுத் துறைத் தலைவர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space