2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலின்போது, அமெரிக்காவில் “டிப்ஸ்களுக்கு வரி இல்லை” என ட்ரம்ப் அறிவித்தார். அந்தக் கொள்கை கடந்த ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
“டிப்ஸ்களுக்கு வரி இல்லை” என்ற அரசுக் கொள்கை சட்டமாக்கப்பட்டு, முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்துக்கு, தனக்கு மிகவும் பிடித்த, உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் முன்னணி துரித உணவு நிறுவனமொன்றின் சீஸ் பர்கர், ப்ரைஸ் முதலான உணவுகளை ஒன்லைன் தளமொன்றின் ஊடாக வரவழைத்தார்.
ஆர்கன்சாஸைச் சேர்ந்த “டோர் டேஷ்” என்ற ஒன்லைன் நிறுவனத்தின் ஓட்டுநரும் குடியரசு கட்சியின் ஆதரவாளருமான ஷரோன் சிம்மன்ஸ் என்பவர் ஓவல் அலுவலகத்துக்கு சென்று ட்ரம்பிடம் குறித்த துரித உணவுகளை வழங்குவது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை ட்ரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து, அவை வைரலாகின.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் லாஸ் வேகாஸில் நடைபெற்ற “டிப்ஸ்களுக்கு வரி இல்லை” என்ற கொள்கை சட்டமாக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ரம்ப், குறித்த துரித உணவு விளம்பர காணொளி மற்றும் படங்களில் தான் தோன்றியதை, தானே விமர்சித்தார்.
“அரசியலில் நாம் இதுபோன்ற காரியங்களை செய்கிறோம். அவை சற்று தரம் குறைந்தவை. அவை, சிறு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனாலும், நாம் அவற்றை செய்கிறோம்” என்றார் ட்ரம்ப்.
ஈரானுடனான போர்ச்சூழலில் இதுபோன்ற ஒரு காணொளி வெளியாகியிருப்பது தற்போது அமெரிக்காவில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.
மேலும், ட்ரம்புக்கு துரித உணவு நிறுவனத் தயாரிப்பு உணவுகளை விநியோகித்த, அவரது கட்சி ஆதரவாளரான ஷரோன் சிம்மன்ஸும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான ட்ரம்ப் காணொளி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space