சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று வெகுவிரைவில் உருவாக்கப்படும். எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேசிய தேர்தல்களில் கூட்டணி ஊடாகவே போட்டியிடுவோம் என பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தற்போது பலமாக உள்ளோம். பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷர்கள் மீது கடந்த காலங்களில் தவறான போலியான குற்றச்சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டன. 75 ஆண்டுகால அரசியலும் சாபம் என்று விமர்சித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 75 ஆண்டுகால அரசியல் செயலொழுங்கையே ஜனாதிபதி பின்பற்றிச் செல்கிறார்.
ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிப்பதற்கு அரசாங்கம் திணறுகிறது. சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் தாமதம் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் விசாரணைகளை அமைச்சரவையா முன்னெடுக்கிறது.
சகல எதிர்;க்கட்சிகளுடன் இணக்கமாக செயற்படுகிறோம். வெகுவிரைவில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் கூட்டணி ஊடாகவே போட்டியிடுவோம்.
எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம். நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் தேர்தலை நடத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
அரசியல் கூட்டணியை உருவாக்குவோம் : சஞ்ஜீவ எதிரிமான்ன
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space