வைத்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். ஆனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. ஏனெனில் அது அரசியல் பிரச்சினையாகும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரச வைத்தியர்களின் பிரச்சினையை எங்களுக்கு தீர்க்க முடியும் ஆனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினையை எங்களால் தீர்க்க முடியாது. ஏனெனில் அது அரசியல் பிரச்சினையாகும். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசில் அமைப்பொன்றை போன்றே செயற்பட்டு வருகிறது.
அதனால் வைத்தியர்களின் பிரச்சினையை வைத்தியர்களின் பிரச்சினையாக புரிந்துகொள்ளவும் அரச வைத்திய அதிகாரிகளின் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக புரிந்துகொள்ளவும் அரசாங்கம் என்ற வகையில் எங்களுக்கு அந்த திறமைும் பலமுமும் இருக்கிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாலும் , வைத்தியசாலைகளில் அவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை காணக்கூடியதாக இல்லை. அதனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது. ஆனால் அவ்வாறானதொரு உணர்வை காணக்கூடியதாக இல்லை. வைத்தியர்கள் வழமை போன்று வந்து செல்கிறார்கள்.
அதனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லட்டும். அது அவ்வாறே நீத்துப்போய்விடும் என்றார்.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைேற்றுக்குவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, விசேட வைத்திய நிபுணர்கள், அவர்கள் இணைக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலைகளில் மாத்திரம் சேவை நடவடிக்கையில் ஏடுபடுவதுடன் விசேட வைத்திய நிபுணர்கள் இல்லாத வைத்தியசாலைகளில் பதில் சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்ந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதாகவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது ; அது அரசியல் பிரச்சினை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space