காலியில் அஹங்கம, கதலுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளது.

மஹாவயிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரஜின ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் இமதுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.