தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் இன்று (17.02.2026) அவையில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
திஸ்ஸ விதாரணவின் மரணச் சடங்குக்கு சென்றிருந்த ரவூப் ஹக்கீடம் அங்கு வந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'எனக்கு கிடைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்திலேயே வாழ்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த சங்கரியின் மகன் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.ஆனால் அவர் தனது சுய உழைப்பில் யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என நினைக்கிறார்.
தனது முழு நேர நாடாளுமன்ற வாழ்க்கையின் பின்னர் தனக்கு கிடைத்த ஓய்வூதியம் அவருக்கு யாரின் உதவியும் இல்லாமல் வாழ வைத்தது.அது தான் ஒரு மனிதனுக்கு முக்கியமானது.
ஓய்வூதியம் நீக்கம் அசாதாரணமானது.சிறு தொகையினர் தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஓய்வூதியம் நீக்கம் செய்வதற்கான முறைமை பிழையானது. கண்மூடித்தனமாக நீக்க எடுத்த தீர்மானம் தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனந்த சங்கரி குறித்த விடயத்தை அவையில் அம்பலப்படுத்திய நிசாம் காரியப்பர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space