இன்று வியாழக்கிழமை (05.03.2026) யாழ். மாவட்டத்திலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 34 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 290,400 லீற்றர் பெற்றோலும், 19 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 158,400 லீற்றர் மண்ணெண்ணையும் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
யாழ்.மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.எஸ்.ராஜகருணா யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதன் அடிப்படையில் யாழ்.மாவட்டத்திலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் நேற்றுப் புதன்கிழமை (04.03.2026) பெற்றோல் விநியோகிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றும் யாழ்.மாவட்டத்தில் 34 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் பெற்றோல் விநியோகிக்க நடவடிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space