வாத்துவை - மொரந்துட்டுவ வீதியில் மெலேகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இரு பஸ்களிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இரண்டு பஸ்களினதும் சாரதிகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இரு சாரதிகளும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: இரு சாரதிகள் படுகாயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space