சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, திங்கட்கிழமை (16) நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து சட்டமா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நீதிமன்றங்களுக்குச் செல்லும் சட்ட அதிகாரிகள், ஏனைய சட்டத்தரணிகளினால் கோரப்படும் வழக்கு ஒத்திவைப்புகளுக்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டார்கள் என சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்புக்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் முழு ஆதரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space