உயர்தரப் பரீட்சைக்கு மீளத் தோற்றும் கணிதபாட மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
Ad Space
Ad Space
நடந்து முடிந்த 2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதத் துறையில் சவால்களை எதிர்கொண்ட மாணவர்களுக்காக அவர்களது தவறுகளைக் கண்டறிந்து தன்னம்பிக்கையை ஊட்டும் நோக்கில் கொக்குவில் பொது நூலக நிர்வாகம் ஏற்பாடு செய்து நடாத்தும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு சனிக்கிழமை (18.04.2026) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை கொக்குவில் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக் கருத்தரங்கில் யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் இராசையா கிருஸ்ணதாஸ் வளவாளராகக் கலந்து கொள்வார்.
Ad Space
Ad Space