எதிர்வரும்- 09 ஆம் திகதி மன்னார் வளைகுடாக் கடற்பரப்பில் புதிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி!
Ad Space
Ad Space
எதிர்வரும்- 09 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் வளைகுடாக் கடற்பரப்பில் புதிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியொன்று உருவாகித் தாழ்வு நிலையாக வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால், எதிர்வரும்- 07 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை சற்றுத் தணியுமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space