ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு சகல துறைகளிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவை பிரதிநிதிகள் குழுவினருக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதுடன், அண்மையில் நாடு எதிர்கொண்ட 'டிட்வா' சூறாவளியின் பின்னர் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சகல துறைகளிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். புதிய வர்த்தக வழிமுறைகள் தொடர்பில் இரு தரப்பின் திட்டங்களும் பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கமைய இரு தரப்பின் ஒத்துழைப்பும் மேலும் வலுவடையும் என பிரதமர் இதன்போது அதிகாரிகள் குழுவிடம் எடுத்துரைத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space