முல்லைத்தீவில் வழமைக்கு மாறாக கடல் சீற்றத்துடன் கொந்தளிப்புடன் காணப்படுவதனை வெள்ளிக்கிழமை (9) அவதானிக்க கூடியதாக உள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு கடற்கரை வழமைக்கு மாறாக  சீற்றத்துடன் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.

இதனால்  கடற்தொழிலாளர்கள், மீனவர்கள் தொழிலுக்கு  செல்ல முடியாது . இதனால்  மீனவர்களின்  வாழ்வாதாரம்  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்  முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 8,9 திகதிகளில் மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் ,10 திகதி அதிக  மழை கிடைக்கப்பெறும் எனவும் அறிவுறுத்தல்  வழங்கப்பட்டமையும்  குறிப்பிடதக்கது.