மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில்  'அம்பர்' (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளள அறிக்கையில்,

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ நிற்பதைத் தவிர்க்கவும்.
நெற்வயல், தேயிலை தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.
தொலைபேசிகள் மற்றும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் (அவற்றை மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்).
திறந்த வாகனங்களான மிதிவண்டி, டிராக்டர் அல்லது படகுகளில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
பாதுகாப்பான கட்டிடங்கள் அல்லது மூடிய வாகனங்களுக்குள் இருக்க முயற்சி செய்யவும்.