தமிழ்த்தேசத்துக்காக உறுதியோடு பயணித்த தேசப்பற்றாளரும், அகிலஇலங்கைத்தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் உபதலைவருமான   இராஜப்பு எட்வேட் ஆனந்தராஜா அவர்களின் பூதவுடலுக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் கொடிகள் போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சிக் கொடியினை  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொடிகளை  போர்த்து  அஞ்சலி செலுத்தினார்.​கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உடலுக்குத் தமது ஆழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்தினர்.