கணக்காய்வாளர் நாயகம் பதவி தொடர்பாக, ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு தொடர்பான விடயம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது முறையாக அரசியலமைப்பு பேரவைக்கு கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான ஒருவரின் பெயரை ஜனாதிபதி முன்மொழிந்தார்.

அதன்படி, இன்று சனிக்கிழமை (31) கூடி இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை (03) கூடி இறுதி தீர்மானம் எடுக்கும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.