கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் இந்தியாவில் கைது!
Ad Space
Ad Space
பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த "உடுகம்பல அலயா" என அழைக்கப்படும் நபரே இவ்வாறு இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இலங்கை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space