கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்
Ad Space
Ad Space
இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) கபில சந்திரசேனவை எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட திகதியிலேயே அவரது பிணை மனு தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.
Ad Space
Ad Space