கம்பஹாவில் 13 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்
Ad Space
Ad Space
கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதுல நிம்சத் எனும் 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடைசியாக நீல நிறத்திலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டை மற்றும் கிரீம் நிறத்திலான அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்.
குறித்த சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால், 077 555 4959 அல்லது 077 555 4979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Ad Space
Ad Space