காணி அபகரிப்பினால் பொருளாதாரம் பாதிப்பு
Ad Space
Ad Space
திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் காணி அபகரிப்பினால் மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் ஒரு நிலையில்லாத வாழ்க்கையை மக்கள் அனுபவிப்பதாகவும் காணி உரிமைக்கான திருகோணமலை மாவட்ட செயலணியின் தலைவர் ஏ.ஏ.சிபுனிஸ் தெரிவித்தார். திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை தெரிவித்தார். தென்னமரவாடி மற்றும் முத்துநகர் காணி பிரச்சினை தொடர்பில் பல அரச திணைக்களங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திய நிலையில் மொரவெவ பிரதேசத்தில் உள்ள புளியங்குளம் வரையான காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் மக்களுடைய காணி பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பிலான குழு சிறந்த தீர்வினை பெற்று தரும் என எதிர் பார்ப்பதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் மனித எழுச்சி நிறுவன அமைப்பின் பணிப்பாளர் கே.நிஹால் அஹமட், மற்றும் அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனார்தீன் ஒருங்கிணைப்பாளர் எம்.பீ.எம்.முஸ்தபா மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space