காலநிலையால் வீழ்ச்சியடைந்த மீன் விலைகள்!
Ad Space
Ad Space
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மீனவர்கள் தமது கடற்பயணங்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக மீன்பிடி குறைந்துள்ள போதிலும், சந்தையில் மீன்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிரி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான மீன்களின் விலைகளும் தற்போது குறைந்துள்ளதாகவும், ஒரு கிலோகிராம் மீன் 800 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space