வெலிகந்த, சிங்கபுரவில் உள்ள விவசாய நிலப்பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த யானையும் அதன் குட்டியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட யானைகள் திருகோணமடு வனவிலங்கு காப்பகத்தில் விடப்பட்டுள்ளன.
பெண் யானைக்கு சுமார் 20 வயது எனவும், அதன் குட்டிக்கு 03 வயது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைக் கூட்டத்தைச் சேர்ந்த இந்த யானையும் குட்டியும் எதிர்பாராதவிதமாக அங்குள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இரண்டும் விழுந்துள்ளன.
இந்நிலையில், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யானைகளை வெலிகந்த வனவிலங்கு காப்பாளர் ரேஞ்சர் சி.ஏ. வனசிங்கவின் தலைமையில் அதிகாரிகள் குழு ஜேபிசி இயந்திரம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space