கிளிநொச்சியில் ஆடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Ad Space
Ad Space
கிளிநொச்சி - பளை, பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடிக்காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (15.04.2026) இடம்பெற்றுள்ளது.
இன்று காலை ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர், சடலம் ஒன்று கிடப்பதை முதலில் கண்டறிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கிராம அலுவலருக்கும் பளை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த சடலம் அடிக்காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space