கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சாரசபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11.01.2026) மதியம் 12:45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை முகாமின் டி.ஆர்.எல்.அதுக்கோரல அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த, அநுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்டுத்திய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அரச நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல், அரச சொத்தை தவறாக பயன்படுத்துதல் எனும் குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிய நான்கு பேர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space