கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை
Ad Space
Ad Space
Ad Space
அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்த இளைஞனுக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், சம்பவ இடத்துக்குச் விரைந்த அநுராதபுரம் இலக்கம் 02 நீதிமன்ற நீதிவான், ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதனையடுத்து உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space
Ad Space