கொஸ்கொட பகுதியில் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர், கைதான நபரின் வங்கி அட்டையிலிருந்து மோசடி செய்த பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மேலும் சில சந்தேக நபர்களைக் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான போதைப்பொருள் வியாபாரியின் வங்கி அட்டையின் ஊடாக பணம் திருடிய காவல் துறை உத்தியோகத்தர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space