கேகாலையில் நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கொடூரமாக தாக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது.
நூரிய பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்படுவதாக பிரதேசவாசிகள் சிலர் நூரிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.
சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நூரிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.