சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (09) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றபோதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
சஜின் வாஸ் குணவர்தன கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space