சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக விமான நிலையப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, விமான நிலையத்தின் வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கம்பளை பகுதியை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக விமான நிலையப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space