சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுத்து வைக்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்
Ad Space
Ad Space
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுத்து வைக்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என தேசபக்தி தேசிய இயக்கத்தின் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான சஞ்சீவ வீரவிக்ரம வலியுறுத்தினார். கொழும்பில் சனிக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.உள்ளூர் சுற்றுலா ஆராய்கஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,சுரேஷ் சலே 38 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றியுள்ளார். நாட்டைப் பாதுகாப்பதற்கு அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். ஏற்றுக்கொள்ளக்கூடியதும் உறுதிப்படுத்தக்கூடியதும் நம்பகமானதுமான ஆதாரங்கள் இன்றி அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.எனவே, அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீடிக்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்.சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டபோது அவருக்கு எதிரான ஆதாரம் என்ன என நீதிமன்றம் கேட்டது. அதற்கு அசாத் மௌலானாவின் வாக்குமூலமே பிரதான ஆதாரம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.அந்த வாக்குமூலம் பின்னர் அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் மௌலானா உண்மையில் கூறிய விடயங்களுடன் வேறுபட்டதாக உள்ளது.அசாத் மௌலானா என அறியப்படும் மொஹமட் மில்ஹார் மொஹமட் ஹன்சீர் 2022 பெப்ரவரி 2ஆம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறி பிரான்ஸ் சென்ற பின்னர் சுவிட்சர்லாந்தில் சுமார் 35 நாட்கள் தங்கியுள்ளார்.இதழியல் பயிற்சிபெறுஅந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அல்லது சுரேஷ் சலே தொடர்பாக அவர் எதுவும் கூறவில்லை.மியூனிச்சில் சட்டத்தரணி மார்ஷல் போசனெட்டை சந்தித்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள், கருணா தரப்பு, பிள்ளையான் தரப்பு, அரசியல் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடனான தொடர்புகள் குறித்தும், பணம் தொடர்பான பிரச்சினையால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.விஜயாந்தன் ரத்னகுமார் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டதுடன், அவர் இலங்கைக்கு வந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயாராக உள்ளார்.சுவிட்சர்லாந்தில் டயட்ரிச் வான் போலரொன் என்ற சட்டத்தரணியிடமும் மௌலானா வாக்குமூலம் வழங்கியுள்ளார். இலங்கை இராணுவம் அல்லது அரசாங்கத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறினால் அகதி விண்ணப்பம் வெற்றியடையும் என தெரிவிக்கப்பட்டபோதும், பொய்யான தகவலைக் கூற அவர் மறுத்துள்ளார். சுவிட்சர்லாந்திலும் பின்னர் பிரான்ஸிலும் அவரது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும், அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர் அவர்களுடன் பிரான்ஸில் தங்கியுள்ளார்.பின்னர் சேனல்-4 நிகழ்ச்சியில் மௌலானா சுரேஷ் சலே மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்பாக பேசியுள்ளார். அந்த காணொளி சேனல்-4 இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள போதிலும், அதன் பிரதிகள் வேறு இணையத்தளங்களில் உள்ளன. நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்காக சட்டத்தரணிக்கு செலுத்தப்பட்ட 2,000 சுவிஸ் பிராங்கை நண்பருக்கு மீளச் செலுத்தியுள்ளார். அந்த நண்பரும் இலங்கைக்கு வந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கவும் நீதிமன்றில் சாட்சியமளிக்கவும் தயாராக உள்ளார்.எனவே, சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுத்து வைக்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். அசாத் மௌலானாவின் வாக்குமூலமே பிரதான ஆதாரமாகக் கருதப்படும் நிலையில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் உண்மைக்காகவும் நீதிக்காகவும் முன்நிற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்களை குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவி வழங்குவது தொடர்பான சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்
Ad Space
Ad Space