இதேவேளை ஏற்கனவே வடமேற்கு பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் எத்தனை எலும்பு தொகுதிகள் காணப்படுகின்றன என்பது சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே தெரியவரும்.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கையின்படி இந்த அகழ்வு 1.5 அடியிலிருந்து 2 அடி ஆழமான நிலத்தில் தான் இதுவரை காலமும் என்பது தொகாதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. ஆகவே அகழ்வு பணிகளின் ஆழமானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளின் போதே தீர்மானிக்கப்படும்.
ஸ்கான் பரிசோதனை செய்யப்படும்போதும் தெரிவு செய்யப்பட்ட பகுதியை அந்த ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது. பரிசோதனை உட்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ் பணிகளை முன்னெடுப்பதோடு, ஏனைய இடங்களில் என்பு தொகுதிகள் இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மேலும் கண்டறிக
விளம்பர சேவைகள்
South Asians & Diaspora
வலையொலி சந்தா