ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச!
Ad Space
Ad Space
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த பல கட்சிகளின் கூட்டணியில் நாமல் ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரியால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
இன்று உலகில் அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடாக நாம் மாறியுள்ளோம். அந்த எரிபொருளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படப்போகிறது.
இந்த டிசலில் மின்னுற்பத்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு 4500 இலட்சம் ரூபா செலவாகிறது. அப்போ இந்த பணத்தை செலுத்துவது யார்?அமைச்சரா அல்லது ஜனாதிபதியா?
இந்த நிலக்கரி மோசடியை செய்தது அமைச்சர் மட்டுமல்ல இதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையும் சம்பந்தப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சரை மட்டும் இதற்கு பொறுப்பாளியாக்குவதற்கு நாம் விடமாட்டோம்.இதற்கு உயரிய நீதி செயற்பாட்டுக்கு நாம் செல்வோம்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் விசாரணைகள் நடைபெறுவதாக தெரியவில்லை. அதனால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்த இதற்கு சரியான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளோம்.
இந்த நிலக்கரி மோசடிக்கு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகியவுடன் முடிந்து விட்டது என அரசாங்கம் நினைக்குமானால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
இதனால் ஏற்பட்டிருக்கும் நட்டத்தை ஈடு செய்வது யார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space