சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் சஞ்சிகையின் 338 ஆவது மாசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (26.02.2026) முற்பகல் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.சிந்துரா கலியுகவரதன் மலரின் வெளியீட்டுரையையும், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.புனிதவதி சண்முகலிங்கம் மலரின் மதிப்பீட்டுரையையும் ஆற்றினர். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.