டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய திட்டம்
Ad Space
Ad Space
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக புதிய திட்டமொன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள், அபாய நிலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட இடங்கள் முக்கியமாக அதி அபாயகரமானவை, மத்திய அபாயகரமானவை மற்றும் குறைந்த அபாயகரமானவை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதி அபாய பிரிவில் உள்ள வீடுகள் மேலும் முன்னுரிமை 1, 2, 3 என துணைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.
இந்த முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்படும். அதி அபாய வலயத்தில் உள்ளவர்கள் மீள்குடியேற்றப்பட்டிருந்தாலும், அரசாங்கம் நிதியை திறம்பட பகிர்ந்தளிக்க இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், எந்த முன்னுரிமைப் பிரிவில் உள்ளீர்கள் என்பதை தங்களது பிரதேச செயலகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்இ ஒரே பகுதியில் ஆய்வு செய்யப்பட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நிதி வழங்கப்படும். இதனால், உங்கள் அயலவருக்கு இழப்பீடு கிடைத்தாலும், உங்களுக்கு பின்னர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டித்வா புயல் இழப்பீடு வழங்கும் இந்த புதிய திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, உங்கள் அருகிலுள்ள பிரதேச செயலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Ad Space
Ad Space