களுத்துறை பிரதேசத்தில் தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் நகைக் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரான ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் அளுத்கமை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.


சந்தேக நபரான ஆசிரியர்  தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோரிடம் சுமார் 59 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கடனாக வாங்கி ஒரு மாத காலத்தில் திருப்பி தருவதாக கூறி  மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.