தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் துண்டுப் பிரசுரம்!
Ad Space
Ad Space
Ad Space
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு வலுக்சேர்கும் வகையில் தமிழ்தேசிய பேரவையால் நல்லூரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்படுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், நல்லூரில் இத்துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு மக்கள் விழிப்புணர்வுப் பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.மேலும், தமிழ் மக்களின் நீதிக்கான குரல், முள்ளிவாய்க்கால் முதல் ஜெனீவா வரை வரலாற்றை மறைக்க முடியாது நீதியை மறுக்கவும் முடியாது. தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த துண்டுபிரச்சார பணிகள் நடைபெற்று வருகின்றன.குறித்த பேரணியானது எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து 12.30 மணிவரை சங்கிலியன்பூங்காவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Ad Space
Ad Space
Ad Space