தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருக்கோணமலை சிவன் கோயில் மூன்றலில் கடந்த 15.09.2026 தொடக்கம் ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணி அளவில் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வியாழக்கிழமை (17) திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் மய்யம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, பொதுச் சுடரும் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து மலரஞ்சலி தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.