காலி - படபொல பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (23) பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் காலி - எத்கந்துர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் 2024ஆம் ஆண்டு கரந்தெனிய பகுதியில் திருடப்பட்டதுடன், சந்தேகநபர் பல திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space