துமிந்த திசாநாயக்க உட்பட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிப்பு
Ad Space
Ad Space
Ad Space
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் பெண்ணொருவர் என இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இக்குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உட்பட இரு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space
Ad Space