இலங்கை செய்திகள்
அவர் இன்று அதிகாலை 02.25 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-649 என்ற விமானம் மூலம் டுபாய் ஊடாக துருக்கி நோக்கிப் பயணமானார்.
துருக்கியில் நடைபெறும் சர்வதேச அழகிப்போட்டியில் தெவினா நவீக்ஷி
Ad Space
Ad Space
துருக்கியில் நடைபெறவுள்ள "மிஸ் அவுரா இன்டர்நேஷனல்" (Miss Aura International - 2026) சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வைத்தியர் தெவினா நவீக்ஷி இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர், இன்று (10) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை துருக்கியின் அண்டாலியா நகரில் நடைபெறவுள்ளது.
இலங்கை சார்பாக இப்போட்டியில் கலந்துகொள்ளும் தெவினா நவீக்ஷி, ஒரு தொழில்முறை வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space