நவீனமயமாக்கப்பட்ட மேற்கு பிராந்திய விநியோக மையத்தை உத்தியோகபூர்வமாக இயங்கச் செய்துள்ள ஹெல்த் கார்ட் விநியோகம்
vidiyel 20 சித்திரை 2026 · 14:54 7 views
Ad Space
Ad Space
சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஹெல்த் கார்ட் விதியோகம் இலங்கையின் மருந்து விநியோக துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக தனது நவீனமயமாக்கப்பட்ட மேற்கு பிராந்திய விநியோக மையத்தை (WRDC) உத்தியோகபூர்வமாக இயங்கச் செய்துள்ளது.
சுமார் 18920 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், முழுமையான வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதிகள் தானியங்கி தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச தரத்திலான விநியோக நடைமுறைகளை கொண்டுள்ளது.
இதன் மூலம் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் எஸ் பி சி ஒசுசல கிளைகளுக்கு உயர்தர மருந்துகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் விநியோகிப்பதை நிறுவனம் உறுதி செய்கிறது.
16275 சதுர அடி களஞ்சிய பரப்பைக் கொண்டுள்ள இந்த மையம் 2295 சிபிஎம் கொள்வனவு வரை மருந்துகளை சேமிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக குளிரூட்டி அறைகளின் கொள்ளளவு 15 சிபிஎம் இருந்து 30 சிபிஎம்ஆக இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம்மையில் ஐஎஸ்ஓ 9001:2015 மற்றும் சிறந்த விநியோக நடைமுறை தர நிலைகளுக்கு இணங்கச் செயல்படுகிறது மருந்துகளின் தரத்தை பாதுகாக்க 2-8°c வெப்ப நிலையில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும் நேரடி வெப்பநிலை கண்காணிப்பு அமைப்புகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
மேலும் மின் தடைகளின் போதும் மருந்தின் வீரியம் குறையாமல் இருக்க உயர் திறன் கொண்ட மின் பிறப்பாக்கிகள் மற்றும் பிரத்தியேக எரிபொருள் சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குளிர் சங்கிலி எவ்வித தடையுமின்றி பராமரிக்கப்படுகிறது.
நிறுவைத்தின் பொறுப்பான விநியோகக் கொள்கையின் ஒரு அங்கமாக விற்பனையாகாமல் திருப்பி அனுப்பப்படும் மற்றும் காலாவதியான மருந்துகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் வழிகாட்டல்களுக்கு அமைய பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுகின்றன.
நாடு தழுவிய ரீதியில் 7 பிராந்திய விநியோக மையங்களை கொண்டுள்ள இந்த புதிய WRDC மையத்தின் ஊடாக 4500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது. 102 பயிற்சி பெற்ற பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் இயங்கும் இந்த மையம் இலங்கையின் சுகாதார விநியோக சங்கிலியில் நம்பகத்தன்மை மற்றும் வேகத்தை உறுதி செய்வதில் முன்நின்று உழைக்கிறது.