விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கோரிக்கைக் கடிதம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, வழக்கமான நடைமுறைகளுக்கு அமைவாக நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.